For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகா கும்பமேளாவில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு புனித நீராடினாரா?

01:33 PM Jan 19, 2025 IST | Web Editor
மகா கும்பமேளாவில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு புனித நீராடினாரா
Advertisement

This News Fact Checked by ‘AajTak

Advertisement

“சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மகா கும்பமேளாவில் குளித்ததன் மூலம் சனாதனவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்” என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பத்தின் அமிர்த ஸ்னானின் முதல் நாளில் (ஜன. 14), 3.5 கோடிக்கும் அதிகமானோர் நீராடினார்கள், முதல் இரண்டு நாட்களில், நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டியது. இதனிடையே, சில சமூக ஊடக பயனர்கள் ஒரு படத்தைப் பகிர்ந்து, மகா கும்பத்திற்கு வந்த இந்த கோடிக்கணக்கான மக்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பெயரும் உள்ளதாகக் கூறி வருகின்றனர். அந்த புகைப்படத்தில், அகிலேஷ் தண்ணீரில் நின்றுகொண்டிருந்ததாகவும், ​​படம் எடுப்பதற்கு சற்று முன் அவர் குளித்தது போல் தெரிகிறது.

Did Akhilesh Yadav attend the Maha Kumbh Mela and take a holy dip?

அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒருவர், “சமாஜவாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பத்தில் குளித்ததன் மூலம் சனாதனவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இனி சனாதானி இந்துக்களின் வாக்குகள் அனைத்தும் SP-க்கே போகும். பாபா ஜி இன்னும் குளிக்கவில்லை.” என பதிவிட்டுள்ளார்.

ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பில், இந்தப் படம் மகா கும்பமேளா படம் அல்ல, 2025 ஜனவரி 14-ம் தேதி அகிலேஷ் கங்கை ஹரித்வாரியில் குளித்த போது எடுத்தது என்று கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

அகிலேஷ் யாதவ் போன்ற பெரிய தலைவர் மகா கும்பத்திற்கு வந்திருந்தால் கண்டிப்பாக இது குறித்து செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால், தேடியதில் இது குறித்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த தலைகீழ் தேடலில், அகிலேஷ் யாதவின் ட்வீட்டில் வைரலான படம் கிடைத்தது. ஜனவரி 14, 2025 தேதியிட்ட அந்த ட்வீட்டில் மேலும் 2 படங்களுடன் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், “மகர சங்கராந்தியின் புனிதத் திருநாளில் மகா கங்கையின் ஆசீர்வாதத்தை நாடினேன்” என்று பதிவிட்டிருந்தார்.

பிறகு, இதுகுறித்து வெளியான செய்திகளும் கிடைத்தது. மகர சங்கராந்தி அன்று ஹரித்வாரில் உள்ள கங்கையில் அகிலேஷ் யாதவ் நீராடினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அகிலேஷின் தனிப்பட்ட வருகை, இது ஹரித்வாரில் உள்ள உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லை. வருகைக்குப் பிறகு, அவர் தனது புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார், அதில் அகிலேஷ் ஹரித்வாரின் கங்கையில் நீராடுவதைக் காண முடிந்தது.

நவ்பாரத் டைம்ஸின் அறிக்கையின்படி, அகிலேஷ் ஜனவரி 14 அன்று உத்தரகாண்டில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஹரித்வாருக்கு புறப்பட்டார். அங்கு கங்கையில் நீராடினார். மேலும், அவர் தனது குடும்பத்தினருடன் நமாமி கங்கை நதி பகுதியில் பூஜை செய்து தனது மாமா ராஜ்பால் சிங் யாதவின் அஸ்தியை கங்கையில் கரைத்தார். ராஜ்பால் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இருந்து பின் ஜனவரி 9ம் தேதி இறந்தார்.

Tags :
Advertisement