இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்தியக் கொடியுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினார்களா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Boom’
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடியதாகக் கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் இந்த வீடியோ திருத்தப்பட்டு போலியானதாக வெளியிடப்பட்டது கண்டறியப்பட்டது. போட்டியின் அசல் காட்சிகளில், வைரலான புகைப்படத்தில் காணப்படும் நபர் வெறும் கையுடன் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தாமல் இருப்பதை BOOM கண்டறிந்துள்ளது.
பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் , முதலில் பேட்டிங் செய்து, ஐசிசி ஆண்கள் ஒருநாள் போட்டியில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அதேபோல இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 177 ரன்கள் எடுத்ததன் மூலம் 326 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்ததார்.
பதிவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் , காப்பகப்படுத்த பதிவை காண இங்கே கிளிக் செய்யவும். அதே புகைப்படம், ஃபர்ஸ்ட் கிரிக்கெட் என்ற யூடியூப் சேனலின் அறிக்கையில் அதே தவறான கூற்றுடன் பயன்படுத்தப்பட்டது.
உண்மைச் சரிபார்ப்பு :
சமூக ஊடங்களில் வைரலாகும் படத்தின் உண்மைத் தன்மையை அறிய முதலில் வைரலாகும் படத்தினை உற்று கவனித்தோம். இதன் மூலம் கையில் எந்தக் கொடியும் இல்லை என்பதை BOOM அடையாளம் கண்டுள்ளது, மேலும் அந்தக் கொடி புகைப்படத்தில் திருத்தப்பட்டு பகிரப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது. கொடி நடுவானில் தொங்கவிடப்பட்டிருப்பதையும், யாரும் கொடியைப் பிடிக்காமல் இருப்பதையும் நாங்கள் முதலில் கவனித்தோம். கீழே உள்ள நெருக்கமான படத்தில் அதை காண்பித்துள்ளோம்.
வைரலான புகைப்படத்துடன் அசல் காட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். தவறான கூற்றை உருவாக்க இந்தியக் கொடி டிஜிட்டல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை ஒப்பீடு காட்டுகிறது.
BOOM நிறுவனம், AI டிடெக்டர் கருவியான ஹைவ் மாடரேஷனைப் பயன்படுத்தி புகைப்படத்தை சோதித்தது. இதன்படி, படத்தில் AI-உருவாக்கப்பட்ட அல்லது ஆழமான போலி உள்ளடக்கம் இருக்க வாய்ப்பில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் கொடி எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் AIஆல் உருவாக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.