மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?
This news fact checked by Newsmobile
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் தாதாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி எம்எல்ஏ 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக வைரலான வீடியோ பழையது என கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி, அவதூறான பேசுவதோடு அரசு அதிகாரிகளை அச்சுறுத்துவது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோ 2024 பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டது என்ற கூற்றுகளுடன் பகிரப்பட்டு வருகிறது.
30 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பில், அப்பாஸ் அன்சாரி, “அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த இடமாற்றங்களும் இருக்காது என்பதை அகிலேஷ் யாதவிடம் நான் தெளிவாகக் கூறியுள்ளேன். தற்போது யார் பதவியில் இருக்கிறாரோ அவர்கள் அங்கேயே இருப்பார்கள். எங்களின் பிரச்னைகளை நாங்கள் தீர்த்த பிறகே, எந்த இடமாற்றச் சான்றிதழ்களும் அங்கீகரிக்கப்படும்” இவ்வாறு கூறுவதுபோல் அமைந்துள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு:
சமூக வலைதள பக்கங்களில் பரவிய தகவல்களை நியூஸ்மொபைல் சரிபார்த்து, வைரலான வீடியோ மார்ச் 4, 2022க்கு முந்தையது மற்றும் தவறானது எனக் கண்டறிந்தது.
இந்த வீடியோ தலைகீழ் படத் தேடலை நடத்தி, இதேபோல் @ANINewsUP இல் மார்ச் 4, 2022 தேதியில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று கண்டறியப்பட்டது. அந்த பதிவில், “#WATCH | SP தலைவர் அகிலேஷ் யாதவிடம், 6 மாதங்களுக்கு 'ஹிசாப் கிதாப்' நடக்கும் என்பதால், 6 மாதங்களுக்கு இடமாற்றம் அல்லது பணியிடங்கள் நிரப்புதல் எதுவும் நடக்காது என்று கூறியுள்ளேன்: அப்பாஸ் அன்சாரி, (03.03.2022)“ என தலைப்பிடப்பட்டிருந்தது.
प्रत्याशी अब्बास अंसारी के वायरल विडियों के सम्बन्ध में थाना कोतवाली पर आचार संहिता के उलंघन के सम्बन्ध में धारा 171च,506 भादावि0 का अभियोग पंजीकृत किया गया है तथा इस सम्बन्ध में निवार्चन अधिकारी (RO) 356-मऊ सदर, मऊ को अग्रिम कार्यवाही हतु रिपोर्ट दी गयी है। #UPPolice pic.twitter.com/I3Rz7KJDiW
— mau police (@maupolice) March 4, 2022
இதே வீடியோவை மார்ச் 4, 2022 தேதியிட்ட ANI இன் YouTube சேனலிலும் கண்டறியப்பட்டது. இந்த குறிப்பைத் தொடர்ந்து, மார்ச் 4, 2022 தேதியிட்ட Mau காவல்துறையின் ட்வீட் கண்டறியப்பட்டது. அதில், “வைரல் வீடியோ தொடர்பாக அப்பாஸ் அன்சாரி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 171F மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என பதிவிடப்பட்டிருந்தது.
இதுகுறித்த மேலும் தேடலில், மார்ச் 4, 2022 தேதியிட்ட Times of India, Jansatta மற்றும் India Today போன்ற நிறுவனங்களின் சமூகவலைதள பக்கங்களில் இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொண்ட பல அறிக்கைகள் காணமுடிந்தது.
#WATCH | I've told SP chief Akhilesh Yadav that no transfers or postings will happen for 6 months as 'hisab kitab' will happen with them first and only then their transfer certificates will be stamped: Abbas Ansari, SP alliance candidate from Mau seat, Uttar Pradesh (03.03.2022) pic.twitter.com/NQ9farLMov
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 4, 2022
TOI அறிக்கையின்படி, “பொதுக் கூட்டத்தில் அதிகாரிகளை மிரட்டியதற்காக சிறையில் உள்ள மாஃபியா டான் முக்தார் அன்சாரியின் மகனும், மௌவின் சுஹெல்தியோ பாரதிய சமாஜ் கட்சியின் (SBSP) வேட்பாளருமான அப்பாஸ் அன்சாரி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.” என பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் தேடலின் போது, தொடர்பற்ற உரிமைகோரல்களுடன் வீடியோ மீண்டும் மீண்டும் வெளிவருவது கண்டறியப்பட்டது.
முடிவு:
எனவே, அப்பாஸ் அன்சாரியின் வைரல் வீடியோ 2022-ம் ஆண்டில் இருந்து பல வழிகளில் வைரலாகியுள்ளது என கண்டறியப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல் 2024 உடன் இந்த வீடியோ தொடர்பில்லாதது என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by Newsmobile and Translated by ‘News7 Tamil’as part of the Shakti Collective.