Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மணிஷ் சிசோடியா தப்பியோடி விட்டார் என AAP வேட்பாளர் அவத் ஓஜா கூறினாரா? | Fact Check

 மனிஷ் சிசோடியா கோழை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், 3முறை வெற்றி பெற்ற தொகுதியை விட்டுவிட்டு ஜங்புராவுக்கு ஓடிவிட்டார் என பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அவத் ஓஜா கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
07:30 PM Jan 14, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Boom

Advertisement

டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சி (AAP) வேட்பாளர் அவத் ஓஜாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. இதைப் பகிர்ந்த ​​பாரதிய ஜனதா கட்சியின்  ஐடி அணியின் தலைவர் அமித் மாளவியா உட்பட பல கட்சி ஆதரவாளர்கள் மனீஷ் சிசோடியாவை தப்பியோடியவர் என்று அவத் ஓஜா கூறியதாக பரப்புகின்றனர்.

வைரல் வீடியோ குறித்து BOOM உண்மையைச் சரிபார்ப்பை செய்தது. இதன் மூல, அவத் ஓஜாவின் நேர்காணலின் ஒரு கிளிப்  எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளது. 2025 பிப்ரவரி 5 அன்று டெல்லியின் 70 சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் . அதன் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிடப்படும். டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக இருந்த மணீஷ் சிசோடியா இந்த முறை ஜங்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்குப் பதிலாக, பட்பர்கஞ்ச் தொகுதியில் கல்வியாளர் அவத் ஓஜாவை ஆம் ஆத்மி கட்சி களமிறக்கியுள்ளது.

வைரலான வீடியோவில், NDTV செய்தி சேனலின் நிருபர் ஆம் ஆத்மி தலைவர் அவத் ஓஜாவிடம், "பட்பர்கஞ்ச் மிகவும் உயர்ந்த தொகுதியாக இருந்து வருகிறது. மணிஷ் சிசோடியா இங்கிருந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை அவர் அந்த இடத்தை காலி செய்துள்ளார்" என்று கேட்கிறார். இது குறித்து அவத் ஓஜா, "வாழ்க்கையில் போராட்டம் இல்லாதவர்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சபதத்தை மீறியிருக்கலாம் அல்லது போரில் இருந்து ஓடியிருக்கலாம்" என்று கூறுகிறார். அமித் மாளவியா , இந்த வீடியோவை  பகிர்ந்து ஆம் ஆத்மியின் வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின் மற்றொரு வேட்பாளர் பேசியதாக பரப்பியுள்ளார்.

 

இதேபோல், பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவும் இந்த வீடியோவைப் பகிர்ந்து 'மனீஷ் சிசோடியாவை தப்பியோடியவர் என்று அவத் ஓஜா ஜி கூறியது மிகவும் தவறு. அவர் நமது டெல்லியின் முன்னாள் துணை முதல்வர்” என குறிப்பிட்டுள்ளார்.

உண்மை சரிபார்ப்பு : 

டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அவத் ஓஜாவின் வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டது. வீடியோவின் வரிசை மாற்றப்பட்டு திருத்தப்பட்டதை BOOM கண்டறிந்தது. நேர்காணலின் எடிட் செய்யப்பட்ட  வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது NDTV என்ற செய்தி சேனலின் வீடியோ அறிக்கையின் கிளிப் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். NDTVயின் யூடியூப் சேனலில் தேடியபோது, ​​ஜனவரி 8, 2025 அன்று பதிவேற்றப்பட்ட முழுமையான நேர்காணலைக் கண்டோம் , அதன் தலைப்பு, 'டெல்லி தேர்தல்: பட்பர்கஞ்சில் போட்டியிடும் அவத் ஓஜாவுடன் சிறப்பு உரையாடல்'. வீடியோவின் 35 வினாடிகளில் இருந்து, நிருபர் வேட்பாளர் அவத் ஓஜாவை அறிமுகப்படுத்தி, "நீங்கள் கட்சியில் சேர்ந்து நேரடியாக தேர்தல் களத்தில் குதித்தீர்களா?" என்று கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, " கல்வி என்றால் என்ன, கல்வியின் பங்கு என்ன என்கிற பெரிய அனுபவத்தைப் பெற்ற பிறகு நான் அரசியலுக்கு வந்துள்ளேன். இன்று நான் பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையைத் திறக்க வந்துள்ளேன், அறிவு ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட அனுபவம் மட்டுமே இருந்தது இப்போது அந்த அறிவையும் அனுபவத்தையும் இந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அரசியலுக்கு வந்தது. போர் காரணமாக அல்ல, எதிரணியினர் தங்கள் வாழ்க்கையில் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சபதத்தை மீறியிருக்கலாம் அல்லது போரில் இருந்து ஓடியிருக்கலாம்." என தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, வீடியோவின் 1.46 நிமிடங்களில் இருந்து, நிருபர்  "பட்பர்கஞ்ச் மிகவும் உயர்ந்த இடமாக இருந்து வருகிறது, மணிஷ் சிசோடியா இங்கிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்த முறை அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். என்ன காரணம் " என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவத் ஓஜா கூறும்போது, ​​"அவர் அதை விட்டுவிடவில்லை, எனக்குக் கொடுத்தார். அவரும் கல்வியோடு தொடர்புடையவர் என்பதாலும், நானும் கல்வித் துறையில் மேலும் பணியாற்ற வேண்டியிருந்ததாலும், அவரிடம் இருக்கை கேட்டு இடம் பெற்றேன்” எனக் கூறினார்.

நிருபரின் கேள்விகள் மற்றும் ஓஜாவின் பதில்களின் வரிசை மாற்றப்பட்டு திருத்தப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தனது கல்வித் துறையை விட்டு அரசியலுக்கு வரும் சூழலில் அந்தக் கவிதையை அவர் கூறியிருந்தார்.

யார் இந்த அவத் ஓஜா?

அவத் ஓஜாவின் முழுப் பெயர் அவத் பிரதாப் ஓஜா . உத்தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் வசிப்பவர். கடந்த ஆண்டு டிசம்பர் 2024ல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். ஐஏஎஸ் தயாரிப்புக்காக பல பயிற்சி நிறுவனங்களில் கற்பித்துள்ளார். மாணவர்கள் அவரை ஓஜா சார் என்று அழைப்பதுண்டு.

முடிவு:

 மனிஷ் சிசோடியா கோழை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், 3முறை வெற்றி பெற்ற தொகுதியை விட்டுவிட்டு ஜங்புராவுக்கு ஓடிவிட்டார் என பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அவத் ஓஜா கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து பூம் நடத்திய உண்மை சரிபார்ப்பில்  வைரல் வீடியோ திருத்தப்பட்டது என்று கண்டறியப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளர் அவத் ஓஜா என்டிடிவிக்கு அளித்த பேட்டியின் வரிசை மாற்றப்பட்டு திருத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Boom and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Aam aadmiAAPAwadh OjahDelhi ElectionManish sisodia
Advertisement
Next Article