Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? - உண்மை என்ன?

05:27 PM May 18, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by Newsmeter

Advertisement

சில தினங்களுக்கு  முன் விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை தாக்கும் அரசு ஊழியர் எனக் குறிப்பிட்டு  சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாக பரவியது. இந்த காணொலியின் உண்மைத் தன்மை குறித்து உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனமான நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்

நடந்த சம்பவம் மற்றும் வைரலான காணொலி

"தமிழகத்திலேயே ஆட்சியாளர்களிடம் தான் மனிதாபிமானம் இல்ல, அரசு ஊழியர்களிடமும் இல்லையா. இந்த கொடூர செயல் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வெளியே தான். ரயில் நிலைய வளாகத்தில் ஆதரவற்ற இந்த முதியவரை அடிக்கிறார்கள்" என்ற கேப்ஷனுடன் சில தினங்களுக்கு முன்பு காக்கி உடை அணிந்திருக்கும் ஒருவர் முதியவரை தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான இந்த காணொலி குறித்து நியூஸ் மீட்டர் செய்தி நிறுவனம் உண்மைத் தன்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. அதன்படி இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தது நியூஸ் மீட்டர். அப்போது, கடந்த மே 9ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "விருதுநகர் ரயில் நிலையம் முன்பு முதியவர் ஒருவர் படுத்து இருந்துள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், அம்முதியவரை அங்கிருந்து செல்லுமாறு கம்பால் தாக்கும் காணொலி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து விருதுநகர் கூரைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் (60) என்பவர், ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மற்றும் காணொலியின் அடிப்படையில், காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. இச்செய்தியை அதே தேதியில் குமுதம் ரிப்போர்ட்டர் ஊடகம் தனது யூடியூப் சேனலில் காணொலியாக வெளியிட்டுள்ளது.

மேலும், GowriSankarD_  என்கிற எக்ஸ் தள பயனர் ஒருவரும்  இப்பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு மதுரை கோட்ட ரயில்வேயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இந்த சம்பவத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சம்பந்தப்பட்டுள்ளார், ரயில்வே ஊழியர் அல்ல. விருதுநகர் மேற்கு காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் மீது ஐபிசி 294(பி) மற்றும் 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு(குற்றம் எண். 95/24) செய்து டிரைவரை கைது செய்து விசாரணை குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு வருகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்

https://x.com/GowriSankarD_/status/1790207040838910448

முடிவு :

முதியவரை அரசு ஊழியர் தாக்குவதாக பரப்பப்பட்ட காணொலியை உண்மை சரிபார்ப்பிற்கு உட்படுத்தியதில்  முடிவாக விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை தாக்கும் அரசு ஊழியர் என்று வைரலாகும் காணொலி தவறானது என்றும் முதியவரை தாக்குபவர் ஆட்டோ ஓட்டுனர் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

This story was originally published by ‘Newsmeter’ and republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckMisleadingold manRailway stationviral videoVirudhunagar
Advertisement
Next Article