Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடுவர் குறித்த முகமது கைஃபின் கண்டன பதிவு - லைக் போட்ட விராட் கோலி!

09:50 PM Apr 22, 2024 IST | Web Editor
Advertisement

நடுவர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் எழுதிய பதிவிற்கு அபராதம் விதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே விராட் கோலி லைக் போட்டுள்ளார்

Advertisement

நேற்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.

மறுபக்கம் ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 6 விக்கெட் இழபிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் யாஷ் தயாள், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், டூப்ளெசியும் களமிறங்கினர். இவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.  விராட் கோலிக்கு  பந்துவீசிய ஹர்ஷித் ரானா பந்தை தலைக்கு பக்கத்தில் நோ பால் போன்று போட அதனைத் தடுத்த கோலி கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் நோபால் என அறிவிக்காமல் அவுட் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியும் நடுவரிடம் நேரே சென்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதார் ஜோடி இணைந்து அணிகளின் ரன் எண்ணிக்கையை உயர்த்தி இருவரும் அரைசதம் அடித்து அவுட்டாகினர்.

இதையும் படியுங்கள் : விண்ணப்பித்து பல நாட்களாகியும் உம்ரா பயணத்திற்கு விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு – சவூதி மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு வெளியேற கடைசி 1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்திருந்தது. களத்தில் இருந்த கரண்சர்மா அதிரடியாக பந்தை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு 2 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை ஏற்படுத்தினார். எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க்கின் கையிலே கேட்ச் கொடுத்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் கரண் சர்மா.

இதனையடுத்து 1 பந்திற்கு மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் அடித்து ஆடிய சிராஜ் 2 ரன்கள் எடுத்து சமன் செய்ய முயற்சித்தபோது ரன் அவுட் ஆகி 1 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு விராட் கோலி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுடம் பந்து வந்த விதம் குறித்தும் தான் எப்படி அதனை எதிர்கொண்டேன் என்பது குறித்தும் விளக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்த நிலையில் போட்டியின்போது அவுட் குறித்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியின் கட்டணத் தொகையிலிருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த முடிவுக்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், முகமது கைஃப்  தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டதாவது :

"தோனியின் பேட்டின் கீழ் சென்ற ஒரு பந்து வைட் என அறிவிக்கப்பட்டது மற்றும் விராட் கோலியின் அவுட் ஆகிய இரண்டும் முறையானது இல்லை. மைதானத்தில் இத்தனை கேமராக்கள்,  பலமுறை ரீப்ளேக்கள், தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், இதுபோன்ற தவறுகள் செய்யப்படுகின்றன. மொத்தத்தில் நடுவர்கள் மோசமாக செயல்பட்டுள்ளனர்"

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, விராட் கோலி கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் - வின் சமூக வலைதள பதிவிற்கு, இன்ஸ்டாகிராமில் பதிவை விரும்புவதன் மூலம் அவரின் அறிக்கைக்கு தனது  பதிலை தெரிவித்தார்.

Tags :
greenjerseyIndianPremierLeagueIPL2024KKRvsRCBkolkataknightridersMohammad Kaif'sRCBVsKKRRoyalChallengersBengaluru
Advertisement
Next Article