For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய்யின் ‘கோட்’ பட பாணியில் சிஎஸ்கே வெளியிட்ட தோனி-ருதுராஜ் போஸ்டர்!

09:51 PM Jun 22, 2024 IST | Web Editor
விஜய்யின் ‘கோட்’ பட பாணியில் சிஎஸ்கே வெளியிட்ட தோனி ருதுராஜ் போஸ்டர்
Advertisement

'The GOAT' திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவில் விஜய் இரட்டை வேடங்களில் இருக்கும் புகைப்படம் போல சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனி - ருதுராஜ் இருக்கும் புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டுள்ளது.

Advertisement

நடிகரும் தவெக தலைவரும் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்து வரும் 68-வது திரைப்படமான ‘கோட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில், `கோட்’ படத்தின் 50 விநாடி கொண்ட கிளிம்ப்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது. 'கோட்' கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே சுமார் 10 லட்சத்து 30 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (கோட்) படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் கோட் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் முன்னோட்ட விடியோவில் வந்த விஜய் இரட்டை வேடங்களில் இருக்கும் புகைப்படம் போல சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனி - ருதுராஜ் இருக்கும் புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டுள்ளது. சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. விஜய், தோனி, சிஎஸ்கே ரசிகர்களை இந்தப் போஸ்டர் பெரிதும் கவர்ந்துள்ளது.

Tags :
Advertisement