Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நன்றாக விளையாடினால் விளம்பரம் தேவைப்படாது” - தோனி கருத்து!

01:31 PM Jan 01, 2025 IST | Web Editor
Advertisement

நன்றாக விளையாடினால் விளம்பரம் தேவைப்படாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தோனி கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை பெற்றவர். இந்தாண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

இதைத்தொடர்ந்து நவீன டிஜிட்டல் உலகில் தங்களின் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளவதற்கு சமூக ஊடங்களில் புகைப்படங்களை வெளியிடுவதும், மக்கள் தொடர்பு நிறுவனங்கள் மூலம் சுய விளம்பரங்கள் செய்வது போன்ற விஷயங்களில் பிரபலங்கள் ஈடுபடுவது இன்றியமையாததாக மாறியுள்ளது. ஆனால், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்தொடரும் மகேந்திர சிங் தோனி, ஆண்டுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிடுவதே அறிதாக உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும் சரி, ஓய்வுபெற்ற பிறகு சரி, சமூக ஊடகங்களில் இருந்து தள்ளியே இருக்கிறார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் மக்கள் தொடர்புகள் குறித்து தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தோனி கூறியதாவது, "சமூக ஊடகங்களின் மீது எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்ததில்லை. எனக்கு மேலாளராக பலர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வற்புறுத்தினார்கள். நான் 2004-ம் ஆண்டு விளையாடத் தொடங்கியபோது டிவிட்டர் பிரபலமாக இருந்தது, பின் இன்ஸ்டாகிராம் வந்தது. அனைத்து மேலாளர்களும் சில மக்கள் தொடர்பு பணிகளை செய்யலாம் எனத் தெரிவித்தார்கள். நான் அனைவரிடமும் ஒரே பதிலைதான் கூறினேன். நன்றாக விளையாடினால் விளம்பரம் தேவைப்படாது என்று" எனத் தெரிவித்தார்.

Tags :
CricketinstagramMSDMSdhoni
Advertisement
Next Article