பத்திரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி... இணையத்தை கலக்கும் வீடியோ!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒருசில தினங்களே உள்ளது. இதனையடுத்து, வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சிஎஸ்கே அணியின் வீரர்களும் பயிற்சியில் இறங்கியுள்ளனர். சிஎஸ்கே நிர்வாகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தோனி பயற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
அதில், சிஎஸ்கேவின் பதிரானா வீசிய பந்தில் தோனி ஹெலிகாப்டச் ஷாட் அடிப்பார். பந்து சிக்ஸருக்கு சென்று விழும். இதைப் பார்த்து பதிரானா புன்னகைப்பார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட 7 மணி நேரத்தில் இன்ஸ்டாவில் 19 லட்சம் லைக், 25 மில்லியன் (2.5 கோடி ) பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.