Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது - பாஜக, திமுக பிரமுகர்களுக்கு வலைவீச்சு!

09:44 AM Feb 29, 2024 IST | Web Editor
Advertisement

தருமபுரம் ஆதீன மடாதிபதி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாச வீடியோ,  ஆடியோ உள்ளதாகவும்,  சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த  4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது.  ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின்
உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும்,  நேரில்
சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ,  ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும்
இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க
வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டினார் என்று தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும்,  மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி புகார் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஆன்லைனில் அழகு குறிப்பு சொல்லலாம்… பக்கவாதத்திற்கெல்லாம் X தள பக்கத்திலேயே ஆலோசனையா?

மடாதிபதியின் உதவியாளர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் மடாதிபதியின் உதவியாளர் செந்தில், பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம்,  திமுகவின் செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,  பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம்,  வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் துறையினர் விசாரணை
மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்டம்,  பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வினோத் ,  மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளர் விக்னேஷ்,  கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,  உடந்தையாக செயல்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.  இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார்,  பாஜக மாவட்டதலைவர் அகோரம் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags :
arrestedAthinaDharumapuramissuseMayiladuthuraiPolice
Advertisement
Next Article