#Hogenakkal | நீர்வரத்து 16,000 கனஅடியாக குறைவு! - அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 16வது நாளாக தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 16,000 கனஅடியாக உள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 27,000 கனடியாக இருந்தது. இதனால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள் : “All the best Chellam” : #TVK தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரகாஷ் ராஜ்!
இந்நிலையில் 27,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16,000 கனஅடியாக குறைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இன்றும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 16வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.