100 கோடியை தாண்டிய தனுஷின் ’தேரே இஷ்க் மே’ பட வசூல்..!
‘தேரே இஷக் மெ’ திரைப்படம் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்துள்ளது.
02:53 PM Dec 05, 2025 IST | Web Editor
Advertisement
நடிகர் தனுஷ் – ஆனந்த எல் ராய் கூட்டணியில் வெளியான ராஞ்சனா, கலாட்டா கல்யாணம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது திரைப்படமான ’தேரே இஷ்க் மே’ கடந்த நவம்பர் 28ல் வெளியானது.
Advertisement
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், டோட்டராய் சவுத்ரி ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் தனுஷின் நடிப்பு பாராட்டு பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
அதன் படி ‘தேரே இஷக் மெ’ திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
