Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ - காதலர் தின சிறப்பு போஸ்டர் வெளியீடு...

06:45 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.

Advertisement

நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50வது படமான ‘D50’ திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார்.

அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், இந்த படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என தலைப்பு வைக்கப்பட்டு மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ஹீரோவாக பவிஷ் நடிக்கிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காதல் கதையம்சத்தை கொண்டு உருவாகி இப்படத்தின் காதலர் தின சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று காதலர் தினம் என்பதால், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article