Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’ - வெளியான நான்கு நாளில் வசூல் சாதனை!

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் வெளியான நான்கு நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது.
01:38 PM Jun 25, 2025 IST | Web Editor
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் வெளியான நான்கு நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது.
Advertisement

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து  நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவான இப்படம் கடந்த 20 ஆம் தேதி உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியானது. இப்படம் இதுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உலக அளவில் இப்படம் முதல் நாள் மட்டும் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன் பின்னர் வசூல் விவரம் குறித்து படக்குழு தெரிவிக்காமல் இருந்தது. இருப்பினும் இப்படத்திற்கு தமிழ்நாட்டில் இருக்கும் வரவேற்பைவிட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கிடைக்கும் வரவேற்பு அதிகம் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குபேரா திரைப்படம் வெளியான நான்கு நாளில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  .

Tags :
Box Office CollectionDhanushDSPKuberaaKuberaa Box OfficenagarjunaRashmikaSekhar Kammula
Advertisement
Next Article