For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக அளவில் 900+ திரையரங்குகளில் களமிறங்கும் தனுஷின் “கேப்டன் மில்லர்”!

08:18 PM Jan 11, 2024 IST | Web Editor
உலக அளவில் 900  திரையரங்குகளில் களமிறங்கும் தனுஷின் “கேப்டன் மில்லர்”
Advertisement

தனுஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்‘ திரைப்படம் உலக அளவில் 900+ திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிந்த நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன. 12) ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது. நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த படத்தை இப்போது ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் படப் பிரியர்கள் இந்த படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் காண இந்த ஏற்பாட்டை படக்குழு செய்துள்ளனர். இந்நிலையில் உலகளவில் 900+ திரைகளுடன் தனுஷின் மிகப்பெரிய வெளிநாட்டு வெளியீடாக இந்த திரைப்படம் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement