Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

11:01 AM May 23, 2024 IST | Web Editor
Advertisement

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து
நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அங்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள், தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சுற்றி பார்த்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து,
கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிக்கு செல்ல
தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடிக்கு சென்று ஆய்வு செய்த பின்னர், காற்றின் வேகம் குறைவாக வீசினால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அங்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் உருவாகியது.

Tags :
DhanushkodiRameswaramTourists
Advertisement
Next Article