Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலிவுட்டில் விமான படை அதிகாரியாக களமிறங்கும் தனுஷ்!

பாலிவுட்டில் விமான படை அதிகாரியாக நடிகர் தனுஷ் களமிறங்கிறார்.
05:44 PM Jun 07, 2025 IST | Web Editor
பாலிவுட்டில் விமான படை அதிகாரியாக நடிகர் தனுஷ் களமிறங்கிறார்.
Advertisement

திரைத்துறையில் தற்போது பிசியாக வளம் வரும் தனுஷ், படு பிசியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் அவர் நடிப்பில் குபேரா திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன்,  ஓம் ராவத் உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் கை கோர்த்துள்ளார்.

Advertisement

இதனிடையே பாலிவுட்டில்  ராஞ்சனா படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராயுடன் மீண்டும் தேரே இஸ்க் மெயின் படத்தின் மூலம் கை கோர்த்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் நடந்த குபேரா பட இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் போலீஸ் லுக்கில் தோன்றினார். இந்த நிலையில் அதே லுக்குடன் விமான படை அதிகாரி உடையில் தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பில் தனுஷ் நடித்து வருவது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tags :
bollywoodDhanushKriti SanonTere Ishq Mein
Advertisement
Next Article