Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா? - வைரலாகும் புகைப்படங்கள்!

குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா இணைந்து பங்கேற்றதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
05:04 PM Jun 01, 2025 IST | Web Editor
குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா இணைந்து பங்கேற்றதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Advertisement

தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று(ஜூன்.01)  நடக்கவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க படக்குழுவினர் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் இவ்விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக, இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து தனுஷ் ரசிகர்கள் மீண்டும் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறனர்.

விவாகரத்து பெற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று(மே.31) தங்களது மூத்த மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் அதே வெள்ளை உடையில் ஒன்றாக பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தனுஷ் "Proud parents" என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். அதே புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த் எனது பேரனின் முதல் மைல்கல் என்று பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.

Tags :
Aishwarya rajinikanthDhanushKuberaaKuberaa Audio Launch
Advertisement
Next Article