நீதிமன்றத்தை மாற்றக்கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு- உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தார்.
மேலும், ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.