Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன்” - எடப்பாடி பழனிசாமி!

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
03:46 PM Sep 18, 2025 IST | Web Editor
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின்உரிமைகளுக்காக போராடிய முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார். இன்று அவருடைய நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

” ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும், தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்று போராடிய, சமரசமற்ற சமூகநீதி போராளி; "கல்வியே ஒடுக்கப்பட்டவரின் பேராயுதம்" என முழங்கிய புரட்சியாளர், ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில், அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
EPSlatestNewsrettmalaisreenivasanTNnews
Advertisement
Next Article