Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

08:42 AM Nov 12, 2023 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில் விரதம் இருக்கும் பக்தர்கள் இன்றே கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். 

Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா நாளை (13.11.2023) யாகசாலை பூஜையுடன் தொடங்கி 7 நாட்கள் வெகு விமர்சையாக
நடைபெறுகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ந்தேதி நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு வெளி
மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள்
கோயிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாடு முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தீபாவளியை பொருட்படுத்தாமல் கந்த சஷ்டி திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் உடைமைகள்,  பனை ஓலைப்பாய்களுடன் குவிந்து வருகின்றனர்.

கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் 6 நாட்கள் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்வார்கள். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளைகத்தை சுற்றி பல்வேறு பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கும் வகையில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Tags :
devoteesGandaShashtifestivalmurugantempleTamilNadutiruchendurTuticorin
Advertisement
Next Article