For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோயில் திருவிழா! தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்!

10:11 AM Apr 04, 2024 IST | Web Editor
ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோயில் திருவிழா  தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்
Advertisement

ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50,000 மேற்பட்ட பக்தர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி நேர்த்தி கடனை செலுத்தினர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூர் பகுதியில் பொன் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் பொங்கல் திரு விழா  கடந்த மாதம் 26 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.தொடர்ந்து நாள் தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும்  ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.

இதையும் படியுங்கள் : இமாலய இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா – 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அசத்தல்!

இந்நிலையில்,  நேற்று பொங்கல் விழாவுடன் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ பந்தம் திருவிழா நள்ளிரவில் தொடங்கி   நடைபெற்றது. முன்னதாக நள்ளிரவில் குதிரை துளுக்கு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தீ பந்தம் பிடிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கைகளில் தீ பந்தம் ஏந்திய படி நேர்த்தி கடனை செலுத்த அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

திருவீதி உலா நடைபெறும் போது சாலைகளில் உள்ள அனைத்து விளக்குகளும்
அனைக்கப்பட்டு அம்மன் தீ பந்தம் ஒளியில் வந்தது காண்போரை மெய்சிலிர்க்க
வைத்தது.  இந்த தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு ,நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை,
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த  50,000 மேற்பட்ட  பக்தர்கள் கைகளில் தீ பந்தம் ஏந்தி நேர்த்தி கடனை செலுத்தினர்.

Tags :
Advertisement