பழனியில் கொட்டும் மழையில் ஆடிப்பாடி கிரிவலம் சென்ற பக்தர்கள்!
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கொட்டும் மழையிலும் ஆடிப்பாடி கிரிவலம் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று (ஜன.09) காலை 7 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள்
மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பழனியில் இருந்து வெளியூர்
செல்லும் பேருந்துகளும் குறைந்த அளவே இயக்கப்படுகிறது.
இதன் காரணமாக பயணிகள் நீண்டநேரம் பேருந்துக்காக காத்திருப்பதுடன், கன மழையால் மேலும் அவதி அடைந்துள்ளனர். பழனி நகரின் பிரதான சாலைகளில் உள்ள சாக்கடை கால்வாய்கள் பல மாதங்களாக தூர்வாராததால், முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையும் படியுங்கள்: ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் -பாமக நிறுவனர் ராமதாஸ்
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கொட்டும் மழையிலும் ஆடிப்பாடி கிரிவலம் சென்று சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.