For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!

10:58 AM Nov 11, 2023 IST | Web Editor
திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி
Advertisement

திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு தணிந்ததால்,  திருமலைநம்பி
கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு, 
அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

நெல்லை மாவட்டம்,  களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி
மலையில் அடர்ந்த வனப்பகுதியில் ஸ்ரீதிருமலைநம்பி கோயில் உள்ளது.  108 வைணவ
திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட சிறப்புமிக்கதாகும்.  பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம்.  மேலும் தமிழ் மாதங்களின் முதல்  மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.  திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது.  மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  இரு கரைகளையும் தொட்டப்படி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.  இதையடுத்து திருக்குறுங்குடி மலையில் உள்ள திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதுபோல ஆற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.  இதற்கிடையே  மழை குறைந்ததால் ஆற்றில் கரை புரண்ட வெள்ளம் தணிந்தது.  இதையடுத்து திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு,  அனுமதி வழங்கப்பட்டது.  இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மழை மீண்டும் பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tags :
Advertisement