2 மாதத்திற்கு பின் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.கோயிலில் தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மலைப்பாதைகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு கோயிலில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நீர்வரத்து சீரானதை தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மீண்டும் மழை பெய்தால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.