For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

06:13 PM Dec 05, 2024 IST | Web Editor
3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்
Advertisement

மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார்.

Advertisement

மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஏறக்குறைய இரண்டுவார இழுபறிக்கு பிறகு மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபியின் அஜித் பவார் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், யோகி ஆதித்தியநாத் என தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement