For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Tirupati -ல் 8 நாட்களில் 30 லட்சம் ‘லட்டுகள்' விற்பனை! தேவஸ்தானம் தகவல்!

08:52 PM Oct 12, 2024 IST | Web Editor
 tirupati  ல் 8 நாட்களில் 30 லட்சம் ‘லட்டுகள்  விற்பனை  தேவஸ்தானம் தகவல்
Advertisement

திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் விற்பனையான லட்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ நிகழ்வு 9 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டு வாகன சேவை தரிசனத்தை மேற்கொண்டாதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் கடைசி நாளான இன்று, கருட சேவை தரிசனத்தைக் காண மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாட்களில் ரூ. 50 -க்கு விற்கப்படும் சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டிலும் இதே அளவிலான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இதனிடையே, இந்த ஆண்டில் தற்போது வரை உண்டியல் வசூல் ரூ. 26 கோடி வரை வந்துள்ளதாகவும், சென்ற ஆண்டை விட ரூ. 2 கோடி அதிகமாக வசூலானதாகவும் தேவஸ்தான அதிகாரி தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : ‘#GameChanger’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

மேலும், இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ வாரி சேவகர்கள் எனப்படும் தன்னார்வலர்கள் 7 மாநிலங்களிலிருந்து மொத்தம் 3,300 பேர் கடந்தாண்டு சேவை செய்துள்ளனர். அது, இவ்வாண்டில் 4,000 பேராக அதிகரித்துள்ளது.பக்தர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 45 மருத்துவர்கள், 60 மருத்துவப் பணியாளர்கள், 13 ஆம்புலன்ஸ்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement