For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை - பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் #MKStalin மரியாதை!

10:42 AM Oct 30, 2024 IST | Web Editor
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை   பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர்  mkstalin மரியாதை
Advertisement

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா, நேற்று முன்தினம் தேவர் நினைவாலய நிர்வாகத்தின் சார்பில் ஆன்மிக விழா யாகசாலை, லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது.

இந்நிலையில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று (அக்.30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சுவாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார், மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement