மோசமடைந்த காற்றின் தரம் - டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு உத்தரவு!
காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும் மோசமாகி வருகிறது. கடும் கட்டுப்பாட்டுகளை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால், இன்று காலை 8 மணிமுதல் GRAP 3 (Graded Response Action Plan 3) செயல்படுத்தப்படும் என காற்றின் தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி அத்தியாவசிய கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அஇதற்கிடையில் டெல்லி மெட்ரோ நிர்வாகம் வார இறுதி நாட்களில் கூடுதலாக 20 ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
GRAP-II செயல்படுத்தப்பட்டதில் இருந்து ஏற்கனவே 40 ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. GRAP-III வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கும் வரை இந்த கூடுதல் சேவைகள் நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் டெல்லியில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
“அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக, அடுத்த உத்தரவு வரும்வரை டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்படும்” என டெல்லி முதலமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில்,
“டெல்லியில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான நேரடி வகுப்புகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த வகுப்புகளின் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை உறுதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.