Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Chennai -இல் மோசமடைந்த காற்றின் தரக்குறியீடு... வெளியான அதிர்ச்சித் தகவல்!

09:53 PM Oct 31, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதனால் வானில் வர்ணஜாலங்களும் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து வருவதால், சென்னை மாநகரத்தில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. மேலும், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசமாக உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையின் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு உள்ளதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெருங்குடியில் 262, ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளதாகவும், அதேபோல், கொடுங்கையூரில் 165, மணலியில் 189, ராயபுரத்தில் 169 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மிதமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் எந்த இடத்திலும் தரமான காற்று தற்போது இல்லை என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article