IPL 2024 : பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு என்ன? - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
ஐபிஎல் போட்டிகளுக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு குறித்த விவரங்கள் என்ன தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்த விவரங்களை கர்நாடக கிரிக்கெட் வாரியத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே கர்நாடகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக அரசு கூறி வரும் நிலையில் இதனால், ஐபிஎல் போட்டிகள் பெங்களூருவில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், போட்டிகள் எந்தவித தடையுமின்றி நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்த விவரங்களை கர்நாடக கிரிக்கெட் வாரியத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு கர்நாடக கிரிக்கெட் வாரியமும் பதில் அளித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தக் கேள்விக்கு கர்நாடக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது..
” தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவிப்பை எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் ஐபிஎல் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பெங்களூரு கிரிக்கெட் மைதானம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், தொடர்ச்சியாக போட்டியை நடத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.