For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்...தலைமை நீதிபதி அறிவிப்பு!

10:59 AM Apr 26, 2024 IST | Web Editor
உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்   தலைமை நீதிபதி அறிவிப்பு
Advertisement

“உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்கு,  விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 

Advertisement

இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெயில் மூலம் மட்டுமின்றி வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவிக்கின்றனர்.  இதன் காரணமாக நேரம் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல், விரைவாகவும் தகவல்கள் தெரிய படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று  நடைபெற்ற தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தி பொது நலனுக்காக பயன்படுத்துவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.  அந்த விசாரணையின் போது,  நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ‘உச்சநீதிமன்ற தகவல்தொழில்நுட்பச் சேவையில் வாட்ஸ்ஆப் சேவையும் இணைக்கப்படும்’ என்று அவர் அறிவித்தார்.

Tags :
Advertisement