Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனுமதி மறுத்தாலும் பாலஸ்தீன பேரணி நடைபெறும்! - கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

02:04 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

கேரள அரசு பேரணிக்கு அனுமதி மறுத்தாலும், அதை மீறி பாலஸ்தீன ஆதரவு பேரணி நடைபெறும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியுள்ளார்.

Advertisement

நவம்பர் 23-ம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் சினேல் குமார் சிங்கின் உத்தரவை மீறி காங்கிரஸ் பேரணி நடத்தும் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், பேரணிக்கு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வரும் 23-ம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் பேரணி நடத்தப்படும்.  ஒன்று அங்கு பேரணி நடைபெறும் அல்லது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நடைபெறும்  என கே.சுதாகரன் கூறினார்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – தென் மண்டல வானிலை ஆய்வு மையம்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்த சசி தரூரின் உரையை விமர்சித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தாக்கிப் பேசிய அவர்,  தரூரின் உரையில் இருந்து ஒற்றை வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு பேசி வருவது முட்டாள்தனமான செயல் என்றார்.

முன்னதாக, இந்திய ஐக்கிய முஸ்லீம் லீக் பேரணியில் பேசிய சசி தரூர் ஹமாஸை ஒரு பயங்கரவாதக் குழு என்று குறிப்பிட்டார். அதையடுத்து சிபிஎம் கட்சித் தலைவர்கள் ஜலீல், ஸ்வராஜ் உள்ளிட்டவர்கள் சசி தரூரின் பேச்சு இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதாக கூறினர்.

பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமை பேரணிக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதாகவும்,  பின்பு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சுதாகரன் தெரிவித்தார்.

நவம்.23-ஆம் தேதி கோழிக்கோட்டில் நடக்கவுள்ள பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமைப் பேரணியை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தொடங்கி வைக்க உள்ளதாக சுதாகரன் அறிவித்திருந்தார்.

Tags :
CMOKeralaKeralakerala state congressPalestinianpresident k. sudhakaranrallyrefusal permission
Advertisement
Next Article