Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் அவர் எழுச்சியூட்டும் தலைவர் - ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் புகழாரம்!

06:06 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது, மோடி ஒரு எழுச்சியூட்டும் தலைவர் என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் புகழ்ந்துள்ளார். 

Advertisement

ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் தனது மனைவியுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். இந்தியாவிற்கு முதன்முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு வருகை தந்திருந்த அவர், பிரதமர் மோடியுடன் தொடர்ந்து நெருக்கமான உறவை கடைபிடித்து வருகிறார். அவர் கூறியதாவது,

“கிரிக்கெட் மீதான காதல், ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பல்வேறு விஷயங்களில் இருநாடுகளுக்கும் இடையே ஒற்றுமை இருக்கின்றன. எனினும், இருநாடுகளும் போதுமான அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. ஒரு வெளிநாட்டு முதலீட்டாளராக, இந்தியாவில் வணிகம் செய்வது மிகவும் கடினம். இதை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கம்யூனிசத்தை கடைபிடிக்கும் சீனாவில் முதலீடுகளை செய்வது, ஜனநாயக தேசமான இந்தியாவில் இருப்பதை விட எளிதான விஷயமாக உள்ளது என்பது சற்று வேடிக்கையான விஷயம். எனினும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருநாட்டு வர்த்தக உறவுகள் மேம்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நட்பை மிகுந்த சந்தோஷத்துடன் அனுபவிக்கிறேன். இந்தியாவில் பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது, மோடி ஒரு எழுச்சியூட்டும் தலைவர். அவர் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
AustraliaJaipurMalcolm TurnbullNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO India
Advertisement
Next Article