Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கொலை வழக்கில் தேரா சச்சா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை!

04:49 PM May 28, 2024 IST | Web Editor
Advertisement

தேரா சச்சா சௌதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Advertisement

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து 'பூரா சச்' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது. இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில் ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம். குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags :
Drea Sacha SaudaGurmeet Ram RahimPunjab and Haryana High CourtRelease
Advertisement
Next Article