வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு/வடகிழக்கு காற்று தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் மீது நிலவி வருகிறது. இதன் காரணமாக நவ. 11, 14 மற்றும் 15-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவ. 14 மற்றும் 15-ம் தேதிகளில் கடலோர ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மற்றும் தெற்கு வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: “இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைபடாது!” – காஸா மருத்துவமனை நிர்வாகம் உருக்கம்
தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.