For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை!

06:19 PM Jun 12, 2024 IST | Web Editor
தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை
Advertisement

தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பல வகையான நூடுல்ஸ்கள் விற்பனையிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன.

Advertisement

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்யாங் நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைகளுக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மசாலா நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்கு டென்மார்க் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதையடுத்து பல வகையான நூடுல்ஸ்கள் விற்பனையிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன. பல்டக் 3x ஸ்பைஸி, ஹாட் சிக்கன், 2x ஸ்பைஸி-ஹாட் சிக்கன் போன்ற வகை வகையான நூடுஸ்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

இந்த நூடுல்ஸில் அதிக காரத்தை சேர்க்க பயன்படுத்தப்படும் மிளகாயின் சேர்மமான கேப்சைசின் என்ற வேதிபொருள், அதிகளவில் கலந்திருப்பது, நுகர்வோருக்கு நஞ்சாக மாறும் என்று டானிஷ் கால்நடை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்த எச்சரிக்கையை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!

இந்த உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பானது, மக்கள் உடடினயாக இந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டாம்,  என்று வலியுறுத்தியிருக்கிறது. இந்த நூடுல்ஸ்களில் கேப்சைசின் அளவுக்கு அதிகமாகக் கலந்திருப்பதே காரணம், அது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது தொடர்பாக எந்தக் குறிப்பிட்ட சம்பவமும் நடக்கவில்லை.

முதலில் இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும், அளவுக்கு அதிகமாகவோ அல்லது தொடர்ந்து சாப்பிடும்போது உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் உணவுப்பொருள் தயாரிப்பில் சாம்யாங் முன்னணியில் இருப்பதும், 1960ஆம் ஆண்டு முதல் சாம்யாங் நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதும், இவ்வளவு பெரிய நிறுவனம் தற்போது உணவு தரக்கட்டுப்பாட்டு அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது அந்நிறுவனத்தின் தயாரிப்புப் பொருள்களை விரும்பி சாப்பிடும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
Advertisement