வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி வரும் 29 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக தேதி முடிவு
செய்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
"ஜனவரி 26 அன்று திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு விசிக.சார்பில் நடைபெறும் என்றும் இதில்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவதாகவும் தெரிவித்தார். பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும், மின் நுகர்வோர் peak hours கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலிடம் வலியுறுத்தி உள்ளேன்.
தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிக்க வேண்டும், அதற்கான நிவாரண நிதி வழங்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் தமிழ்நாடு முழுவதும் விசிகசார்லில் டிசம்பர் 29 ஆம் தேதி ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
வெள்ள பாதிப்புகளில் தமிழ்நாடு அரசின் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்ட
மீட்பு பணியை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பாராட்டுகிறது என்றவர்,ஒரு
மாநிலத்தில் ஏற்படும் பேரிடர் அந்த மாநிலத்திற்கு மட்டும் இல்லை. மத்திய
அரசிற்கும் பொறுப்பு உண்டு.
சுனாமியை பேரிடராக அறிவில்லை என்றால், இவர்கள் மக்கள் நலனில் எந்த அளவுக்கு
அக்கறையில் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம் . இது பெருமை படவேண்டியது
இல்லை , வெட்கப்பட வேண்டிய விசியம் என்றார். இதன் மூலம் இவர்கள் ஆட்சியை நடத்த அருகதை அற்றவர்கள்.மேலும், ஆட்சியில் இருக்கிறோம் என மமதையில் இவ்வாறு செயல்படுகிறார்கள்.
மேலும் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக பலமுறை முதலமைச்சரிடம் பேசியுள்ளோம். DNA பரிசோதனை மேற்கொள்வதற்காக மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை உண்டு.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.