For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதி நீக்கம்... `வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும்?'- NCERT விளக்கம்!

01:15 PM Jun 17, 2024 IST | Web Editor
பாபர் மசூதி இடிப்பு  குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதி நீக்கம்     வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும்    ncert விளக்கம்
Advertisement

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில், வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும் என NCERT இயக்குநர் தினேஷ்பிரசாத் சக்லானி கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) 12ம் வகுப்புக்கான திருத்தப்பட்ட அரசியல் அறிவியல் பாடநூலை வெளியிட்டுள்ளது.  அதில்,  அயோத்தி குறித்த பாடம் 4 பக்கங்களில் இருந்து 2 பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, குஜராத்திலிருந்து பாஜகவினர் ரத யாத்திரை மேற்கொண்டது மற்றும் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தது உள்ளிட்ட தகவல்கள் முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்தன.  இந்த தகவல்கள் புதிய பதிப்பில் நீக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து,  பாட புத்தகங்கள் காவிமயமாக்கப் பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.  இந்த நிலையில், இது தொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ்பிரசாத் சக்லானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,  "ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  அதை குறை கூறுவது நியாயமற்றது.  பள்ளிகளில் வன்முறை தொடா்பான தகவல்களை கற்பித்தால் அது மாணவா்களின் வாழ்க்கையை பாதிக்கும்.

அவா்கள் வன்முறையை பின்பற்றும் குடிமகன்களாக அல்லது வன்முறையால் பாதிக்கப்படுபவா்களாக மாற வழிவகுக்கும்.  இதுதான் கல்வி கற்பிப்பதன் நோக்கமா?  மாணவா் பருவத்தில் அதை கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.  மாணவா்களை நோ்மறையான குடிமகன்களாக உருவாக்குவதே எங்களின் நோக்கம்.

பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நாட்டின் வளா்ச்சி சாா்ந்த தகவல்களை புத்தகத்தில் சோ்த்துள்ளோம்.  உதாரணமாக மெஹ்ராலி இரும்புத் தூணைப் பற்றி கற்பிக்கும்போது இந்திய உலோகவியலாளா்கள் மற்ற நாட்டு அறிவியலாளா்களைவிட முன்னேறி இருந்தனா் எனக் கூறினால் அது காவிமயமாகுமா?

மாணவா்களுக்கு உண்மையான வரலாற்றை கற்பிக்கவே திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  அவா்களை போா்க்களத்துக்கு தயாா்படுத்துவதற்காக அல்ல. பாடப் புத்தகங்களில் மாற்றம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும்.  அது நிபுணா் குழுவால் தீா்மானிக்கப்படுவது.  அதில் நான் தலையிடவில்லை.  மேலிடத்திலிருந்தும் இது சம்பந்தமாக எந்த அழுத்தமும் தரப்படவில்லை." இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement