Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெங்கத்தூர் மக்களின் தனி ஊராட்சி போராட்டம்... பொங்கல் தொகுப்பு மறுப்பு!

வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்தனர்.
07:49 PM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement

வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக அமைக்க கோரி அப்பகுதி மக்கள் பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்து போராட்டத்தின் ஈடுபட்டதால் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது.  

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் வெங்கத்தூர் கிராமமானது 15வது வார்டில் வருகிறது. இந்த கிராம் 1000 குடும்பங்களையும் 1500 க்கும் மேற்பட்ட வாக்காளர்களையும் கொண்டுள்ளது.

இந்த நிலையில் 15 வது வார்டில் உள்ள வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் தொகுப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி, அதன்படி, வெங்கத்தூர் பகுதியிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை வாங்க மறுப்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் கிராம பொதுமக்கள் 1000-ற்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து கிராம சாலையின் இருபுறமும் மனித சங்கிலியாக நின்று கோஷங்கள் எழுப்பினர். இந்த கிராம மக்கள் பெரும்பாலும் 100 நாட்கள் வேலை திட்டத்தை நம்பியே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் 15-வது வார்டை மட்டும் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனவும்  அவ்வாறு அறிவித்தால் மட்டுமே தங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதுகாக்கப்படும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags :
PanchayatTiruvallurVenkathur
Advertisement
Next Article