சிறையில் இருந்தே வென்ற சுயேட்சை எம்.பியின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி!
ஜம்மு காஷ்மீரில் பாராமல்லா தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் இன்ஜினியர் ரஷீத் பதவி ஏற்பதற்காக இடைக்கால ஜாமின் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அப்துல் ஷேக் ரஷீத், என்ற இன்ஜினியர் ரஷீத். இவர் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லாவை 2 லட்சத்து 4 ஆயிரத்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் : “ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் வகையில் தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என ரசீத் சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சந்தர்ஜித்சிங் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதில் மனு அளிக்க உத்தரவிட்டார். மேலும், ரசீத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.