Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Delhi | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த பூரான்! அதிர்ச்சி அடைந்த பயணிகள்!

10:32 AM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான் இருந்ததாகப் டெல்லியை சேர்ந்தவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சமீப காலமாக உணவகங்கள், விமான நிலையம், ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிகள், பூரான் போன்றவை கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. அண்மையில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி, வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை, சாம்பாரில் இறந்த எலி, ஏர் இந்தியா உணவில் பிளேடு, ஐஸ்கிரீமில் மனித விரல், சாக்லேட்டில் புழு போன்றவை கண்டறியப்பட்டது.

அந்த வகையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆரன்ஷ் சிங் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்துள்ளார். இதனிடையே, ரயில் அவருக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் பூரான் ஒன்று மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆரன்ஷ் சிங் ரயல்வே ஊழியர்களிடம், உணவில் பூரான் இருப்பதை பற்றி கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள் : BRICSSummit | ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

பின்னர், இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். இதில் அவர் பதிவிட்டுள்ளதாவது ; " இந்தியா ரயில்வே உணவின் தரம் மேம்பட்டுள்ளது. தற்போது ரயில்வே துறையினர் அதிக புரதத்துடன் ரைதாவை வழங்கி வருகின்றனர்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/aaraynsh/status/1848212581397471446
Tags :
Delhifood safetyindian railwayirctcNews7Tamilnews7TamilUpdatesRailway food safetyraita
Advertisement
Next Article