Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி - காத்மாண்டு பேருந்து சேவை - ஓராண்டில் 17,603 பேர் பயணம்!

10:53 AM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி - காத்மாண்டு சர்வதேச பேருந்து சேவை மூலம், கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 17,603 பயணிகள் பயணித்துள்ளதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது.

Advertisement

டெல்லி போக்குவரத்துக் கழகம் மூலம், டெல்லி - காத்மாண்டுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து சேவை மூலம் கடந்த ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 17603 பயணிகள் பயணித்துள்ளனர்.

டெல்லி-காத்மாண்டு மைத்ரி பேருந்து சேவை என அழைக்கப்படும் இந்த சேவை, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ள வலுவான உறவை வெளிப்படுத்துகிறது. இந்த பேருந்து சேவை மூலம் 4,782 இந்தியர்கள், 12,471 நேபாளத்தவர்கள் மற்றும் 350 வெளிநாட்டவர்கள் பயனடைந்துள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேருந்து சேவையைப் பயன்படுத்தினர். இது இரு நாடுகளுக்கு இடையேயான நிலையான தேவையை பிரதிபலிக்கிறது. இந்தப் பேருந்து சேவை தொடங்கிய 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,078-ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1,611-ஆக அதிகரித்தது.

ரூ. 2,300 கட்டணத்தில் 1,167 கி.மீ. தொலைவு இந்தப் பேருந்து பயணிக்கிறது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் டிடிசி பேருந்துகளும், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் நேபாளத்தின் மஞ்சுஸ்ரீ யதாயத் பேருந்துகளும் இயக்கப்படும்.

டிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுங்கச் சோதனைகளுக்காக ஃபிரோசாபாத், பைசாபாத், முகிலிங் மற்றும் சோனாலி (இந்தியா நேபாள எல்லை) ஆகிய இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் அடங்கும். இவை தவிர மற்ற இடங்களில் பயணிகள் இறங்கவோ அல்லது ஏறவோ அனுமதிக்கப்படுவதில்லை.

இந்திய மற்றும் நேபாள குடிமக்கள் அரசால் வழங்கப்பட்ட, செல்லுபடியாகும் புகைப்பட அடையாளங்களான பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். வெளிநாட்டினர் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசாவை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி கேட் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியம் பேருந்து முனையத்தில் இருந்து 2014 நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சேவையில் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் 2-க்கு 2 இருக்கை வசதியுடன் உள்ளன. இருப்பினும் சிஎன்ஜி அல்லது மின்சார பேருந்துகள் எதுவும் இதுவரை இயக்கப்படவில்லை. டீசலில் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்கள் வழியாக 1,850 கி.மீ. கடந்து நேபாளத்துக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DelhiDTCKathmanduMaitri Bus Service
Advertisement
Next Article