Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Delhi | ஆம் ஆத்மியிலிருந்து விலகிய #KailashGahlot பாஜகவில் இணைந்தார்!

01:13 PM Nov 18, 2024 IST | Web Editor
Advertisement

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த டெல்லி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்.

Advertisement

டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக அதிஷி இருந்து வருகிறார். அதேபோல் அம்மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் கெலாட் இருந்து வந்தார்.

இந்நிலையில், நவ.,17 அன்று டெல்லி மாநில அமைச்சரான கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி முதலமைச்சரான அதிஷி ஆகியோருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

அக்கடிதத்தில் “டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக பதவி விலகுகிறேன்.” என தெரிவித்திருந்தார்.

மேலும் யமுனை நதியை சுத்தப்படுத்த தவறிவிட்டோம். மக்களுக்கு ஒரு தூய்மையான யமுனை நதியை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தோம். ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற தவறிவிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் முக்கிய பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார்.

Tags :
BJPJoin in bjpKailash Gehlot
Advertisement
Next Article