கலால் கொள்கை வழக்கு - விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான அமைச்சர் கைலாஷ் கெலாட்!
03:40 PM Mar 30, 2024 IST
|
Web Editor
இந்த நிலையில் இவ்வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத்தொடர்ந்து டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான கைலாஷ் கெலாட் சனிக்கிழமை fலை 11.30 மணியளவில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். டெல்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் கெலாட்டுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது இதுவே முதல் முறையாகும். ஏற்கெனவே இவ்வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.
Advertisement
டெல்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார்.
Advertisement
டெல்லி கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான கேஜ்ரிவால் கடந்த மாா்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அதன் பின்னா், அவரை அமலாக்கத் துறையின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Article