Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி | 80க்கு மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு!

01:52 PM Dec 29, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் ஆயுதம் ஏந்திய வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.

Advertisement

குஜராத் மாநிலம் துவாரக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் கபூர் மற்றும் டெல்லியின் கையாலா பகுதியைச் சேர்ந்த ரிங்கு ஆகிய இருவரும் இன்று (டிச.29) காலை டெல்லி காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரின் மீதும் டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தி வழிப்பறியில் ஈடுப்பட்டதாக 80க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்லியின் மதிப்பூர் பகுதியில் குற்றவாளிகள் இருவரும் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் பல குழுக்களாக பிரிந்து இன்று காலை சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி போலீஸார் வளைத்திருப்பதை அறிந்த இருவரும் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் இருவரது கால்களிலும் குண்டு பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேற்கு டெல்லி டிசிபி விசித்ரா வீர் கூறுகையில், “பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 2 குற்றவாளிகள் பஞ்சாபி பாக் பகுதியில் இருப்பதாக இன்று காலை செயல்பாட்டுக் குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதிகாலை 4 மணி முதல் 4:30 மணியளவில் அந்த பகுதியின் அனைத்து வெளியேறும் வழிகளையும் மறைக்க முயன்றனர். போலீஸ் மீது பதிலடி கொடுத்ததில், இருவரின் முழங்காலில் சுடப்பட்டது. ஒருவர் ரின்கு என்றும் மற்றவர் ரோஹித் கபூர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இதற்கு முன்பு 80 குற்றங்களைச் செய்திருக்கிறார்கள், அவற்றில் பெரும்பாலானவை ஆயுதக் கொள்ளை" என தெரிவித்துள்ளார்.

Tags :
criminalDelhiDelhi policeNews7Tamil
Advertisement
Next Article