#Delhi -ல் பட்டாசு வெடிக்க தடை | மாசுக் கட்டுப்பாட்டு குழு உத்தரவு!
டெல்லியில் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவின் படி, வருகிற அக். 31ம் தேதி தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன. இதையொட்டி டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் விநியோகம் செய்தல் மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடித்தல் என அனைத்து வகையான செயல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : NationalWomenChessTournament | சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா
டெல்லியில் மாசு பாட்டை கட்டுப்படுத்தும் விதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தினசரி நடவடிக்கை குறித்து காவல்துறை, மின்னஞ்சல் மூலம் மாசு கட்டுப்பாட்டு குழுவிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.