For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொல்கத்தா அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

09:48 PM Apr 29, 2024 IST | Web Editor
கொல்கத்தா அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி
Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான  போட்டியில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை குவித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்றைய 47வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 7.30 மணியளவில் தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில்,  டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதையும் படியுங்கள் : மேட்டுப்பாளையம் அருகே 46 குடிசை வீடுகள் தீயில் கருகி சேதம்!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்  களமிறங்கினர். பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்  7 பந்துகளில்  13 மற்றும் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 15 பந்துகளில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 3 பந்துகளில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 21 பந்துகளில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்களை குவித்தார்.  20ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்தது.

கொல்கத்தா சார்பில் பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags :
Advertisement