For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் #HemangBadani..!

08:46 PM Oct 17, 2024 IST | Web Editor
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார்  hemangbadani
Advertisement

டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானியும், கிரிக்கெட் இயக்குநராக வேணுகோபால் ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக வேணுகோபால் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

https://twitter.com/DelhiCapitals/status/1846854714064863424

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஹேமங் பதானி பேசியதாவது:

"டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து பயிற்சியாளர் பொறுப்புக்கு என்னை நியமித்த அணியின் உரிமையாளர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்."

இவ்வாறு ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement