Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி பட்ஜெட் - முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல்!

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி என முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல் செய்துள்ளார்.
05:34 PM Mar 25, 2025 IST | Web Editor
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி என முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல் செய்துள்ளார்.
Advertisement

2025-26 ஆம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Advertisement

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதன்படி, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி எனவும் இது கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிட 31.5% அதிகமாகும் என்றும் கூறினார். மேலும் துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசியவர், "பெண்களின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.5 ஆயிரத்து100 கோடி, இதன் மூலமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

பிரதம மந்திரி ஜன் தன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துக்கு
ரூ.2 ஆயிரத்து144 கோடி, 100 அடல் கேன்டீன்கள் நிறுவ ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். போக்குவரத்தை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்துள்ளார்.

Tags :
BudgetCHIEF MINISTERDelhiDelhibudgetpresentsRekha Gupta
Advertisement
Next Article